ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வர்யா,ஒட்டப்பிடாரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாண குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


