தூத்துக்குடி பைபாஸ் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஏழுமலையான் நகர் அருகே ஐடியல் ரோடுவேஸ் அருகே சர்வீஸ் ரோடு மிகவும் சிதைந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த சாலை பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியாக வரும் கனரக லாரிகள், கன்டெய்னர்கள் பள்ளத்தில் இறங்கி ஏறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. சிறிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையை பராமரித்து வரும் தேசிய நெடுஞ்சாலை ஆனையம் சம்பந்தப்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


