முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயங்கள் உள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த ஆலயங்களில் திருப்பணி செய்தவற்காக மாவட்ட அளவிலான கமிட்டி கூட்டத்தில் அனுமதி பெற்று, மாநில அளவிலான கமிட்டி அனுமதிக்கு சென்றுள்ளது. அவர்கள் கூடுதல் ஆவணங்கள் கேட்டுள்ளனர். அதையும் அறநிலையத்துறை அலுவலர் மூலம் கொடுத்து அனுமதி கோரியுள்ளனர். கோயிலுக்கு திருப்பணி செய்ய வேண்டும் என அறங்காவலர்கள் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் கிராம புற கோயில்கள் புரணமைப்பு திட்டத்தின் கீழ் முத்தாலங்குறிச்சி கோயிலில் திருப்பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் ஆலயம், ராமவிநாயகர் ஆலயம், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயத்தில் சுற்றுபுறச்சுவர் அமைக்க அறங்காவலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஆய்வு செய்ய தொல்லியல் அலுவலர் மணி, ஸ்ரீவைகுண்டம் நிர்வாக அலுவலர் கோகுல மணிகண்டன்ஆகியோர் வருகை தந்தனர்.
அவர்கள் கோயிலை ஆய்வு செய்தனர். ஸ்தபதி சபரி நாதன், அலுவலர் இசக்கி பாண்டியன், அறங்காவலர்கள் காமராசு, சுடலைமணி , அர்ச்சகர் சுந்தரகம்பர் உள்பட பலர் இருந்தனர்.


