தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை வெள்ளத்தால் பாதி்க்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று சென்னை வாழ் நெல்லை மக்கள் நலச் சங்க தலைவர் சைமன் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை செயலாளர் லியோ பிரகாஷ், நிஷாந்த் ஜூடு, கலிஃபோர்னியா கலைஞன் ராமன் செல்லத்துரை ஆகிய நிர்வாகிகள் சென்றனர். வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட, நிவாரண பொருட்கள் அதிகம் சென்றடையாத ஏரல், பெருங்குளம் அருகிலுள்ள மங்கலக்குறிச்சி் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள 60 குடும்பங்களுக்கும், கீழ மங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்குமாக மொத்தம் 100 குடும்பங்களுக்கு போர்வை, நைட்டி, கைலி, துண்டு ஆகியன அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கிராம மக்கள் மிகுந்த வாஞ்சையுடன் பெற்றுக் கொண்டதுடன் வெள்ள பாதிப்பு பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் .
இன்னும் வீடுகளில் சமையல் செய்யத் தொடங்காத அவர்கள் ஊர்க்கோவில் அருகே பொதுவாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.. நமது குழுவினரை கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டுமென கேட்டுக் கொள்ள பசியில் சென்ற நம்மவர்கள் அவர்களுடன் உண்டு மகிழ்ந்தனர் !! அந்த நிலையிலும் நம் மக்களின் விருந்தோம்பல் பண்பு நம்மை நெகிழச் செய்தது !!
என்றும் நம் மக்களுக்காக கரம் கொடுப்போம்.


