தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை காரணமாக கடந்த 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில் இன்று அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் உருவான தித்வா புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளது. அதே நேரத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அதேபோன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதன்படி 7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள், அடுத்த 2 நாட்களில் மீண்டும் தடை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் மீன்வளத்துறை அனுமதி வழங்கியதையடுத்து இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சுழற்சி முறையில் 103 படகுகளி் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.


