விளாத்திகுளம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகளை ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் – எப்போதும்வென்றான் இடையே ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உதவி கோட்ட பொறியாளர் ராஜபாண்டி, விளாத்திகுளம் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி புதுராஜா, கிளை செயலாளர்கள் , பேரூர் கழக வார்டு செயலாளர் அருள்சுந்தர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


