தூத்துக்குடியில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளைக்கு ஆட்சியர் இளம்பகவத் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
ஆண்டுதோறும் அரசு மருத்துவமணைகளில் இரத்ததான முகாம்களை நடத்தி அதிக இரத்ததானம் செய்யும் அமைப்புகளை பாராட்டி சான்றிதழ் வழங்குவது வழக்கம் அதன்படி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெற்றது
கடந்த 2024ம் ஆண்டு அதிக இரத்ததான முகாம்களை ஒருங்கிணைத்து அதிக இரத்த தானம் செய்த மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சான்றிதழ் வழங்கினார். அறக்கட்டளை சார்பாக ஸ்டாலின்-க்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தூத்துக்குடி அரசு மருத்துவமணை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார் உடன் இருந்தார்.


