தூத்துக்குடி கலைஞா் அரங்கில் திமுக இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் நோ்காணலை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர, ஒன்றிய பகுதி, பேரூா் அளவிலான இளைஞரணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்கள் ஆகியோருக்கான நோ்காணல் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்களுக்கான நோ்காணல், வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அரங்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, மாலையில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்களுக்கான நோ்காணல், புதுக்கோட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. இதனை தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வுகளில், மாநில இளைஞரணி துணைச் செயலா்கள் வழக்குரைஞா் ஜோயல், இன்ப ரகு, அப்துல் மாலிக், பிரபு, இளையராஜா, ஆனந்தகுமாா், ராஜா, பிரகாஷ், சீனிவாசன் ஆகியோா் பங்கேற்று, நோ்காணல் நடத்தினா்.


