கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிஎம்கிசான் திட்டத்தில் கருங்குளம் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் பெற்று வருகின்றனர்.
இதற்கு விவசாயிகள் தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதலாவதாக ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிஎம் கிஷான் திட்டத்தில் https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்களை பதிவு செய்து ஓடிபி மூலம் சரிபார்ப்பு செய்து பயனடையலாம்.
ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்காத விவசாயிகள் இ சேவை மையங்களில் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து, விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம். பி எம் கிஷான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு ஈகேஒய்சி செய்யலாம் என்று அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


