பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு – முத்து செல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் 12 ஆசிய நாடுகளுக்கு இடையே 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவளை போல்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவியின் பெற்றோர் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


