ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பொன்னங்குறிச்சி, முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார் மகன் செல்வகுமார் (32). இவர் நேற்று அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


