தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை சீரமைத்து நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் மாவட்ட செயலாளர் செல்வகுமார், மேயருக்கு அனுப்பியுள்ள மனுவில், “தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பழுதடைந்து சில பகுதிகளில் மேற்கூரை இடிந்துள்ளது. பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனவே பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய பேருந்து நிலையத்தை உடனடியாக ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பதுடன், பொதுமக்கள் – பயணிகள் பயன்பெறும் வகையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.


