1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது.
1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது.
1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான்.
1814 – எசுப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா, மிசிசிப்பி, மற்றும் கிழக்கு லூசியானாவில் கூட்டமைப்புப் படைகள் சரணடைந்தன.
1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
1912 – ரோட்சு என்ற கிரேக்கத் தீவை இத்தாலி கைப்பற்றியது.
1919 – மே நான்கு இயக்கம்: சீனாவின் பிராந்தியங்கள் சப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
1926 – ஐக்கிய இராச்சியத்தில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1930 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் முதல் நாள் கைப்பற்றிய துளகி தீவு மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு செருமனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
1949 – இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
1953 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக புலிட்சர் பரிசு பெற்றார்.
1959 – முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1970 – வியட்நாம் போர்: அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் கெண்ட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
1978 – தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைகள் தெற்கு அங்கோலாவில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர்.
1979 – மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் செஃபீல்டு போர்க்கப்பல் அர்கெந்தீனா ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1990 – லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
1994 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக்கரை, மற்றும் எரிக்கோவில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
2002 – நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் உயிரிழந்தனர்.
2014 – நைரோபியில் பேருந்துகளில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.


