திங்கள் கிழமை காலை 11 மணிக்கு(08.05.2023) சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் சுப்பராயபுரம்- பன்னம்பாறை தடுப்பணை சீரமைப்பு குறித்த மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, அப்பகுதி விவசாய பெருமக்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு நல்லதொரு கருத்தினைக் கூறி நம் பகுதி செழிப்பாகவும் எந்தவித இழப்பும் இன்றி செயல்பட உங்களுடைய அன்பான பங்களிப்பைச் செய்யுங்கள் என்று தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு எம்எல்தேரி இணைப்பு பகுதி விவசாயிகள் சங்கம் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகா பால் துரை கூறினர்


