தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வருகின்ற 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதைத்தொடர்ந்து, குறுக்குச் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
முன்னதாக அவர் புளியமரத்து அரசடியில் உள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மணியாச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் பத.லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனடிருந்தனர்.


