தமிழகத்தில் 100 % வாக்குப்பதிவு வலியுறுத்தியும், வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஆத்தூரில் இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில் வீதி வீதியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரச்சனை வழங்கினர்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மேலும் ஜூன் 4 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் வாக்காளர்கள் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமையில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர் . இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, மதர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், மதர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் , இளைஞர் மன்ற நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்


