முறப்பநாடு அருகே உள்ள காசிலிங்கபுரம் மேல தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜா (50). டிராக்டர் டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா முறப்பநாடு அருகே உள்ள கொம்புக்கார நத்தம் பகுதியை சேர்ந்த மாரிசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வயலில் வேலை முடித்துவிட்டு டிராக்டரை எடுத்துக்கொண்டு பொட்டலூரணி விளக்கிருந்து செக்காரக்குடி செல்லும் கொம்புகாரநத்தம் பால் பண்ணை அருகில் வந்து கொண்டு இருந்தார். இரவு நேரம் என்பதால் எதிர்பாராத விதமாக டிராக்டர் சாலையை விட்டு கீழே இறங்கி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் சம்பவ இடத்திற்கு சென்று ராஜா உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


