தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமையில் அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், பங்குத்தந்தை அன்றனி புருனோ, திரேஸ்புரம் உதவி பங்குத்தந்தை ஆனந்த், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் முன்னிலையில் கொடி மந்திரிக்கப்பட்டு கொடி பவனியாக வந்து பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா 10 நாட்கள் நவ நாட்களாக கொண்டாடப்படுகின்றன. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை பிராத்தனை தொடர்ந்து நவநாள் திருப்பலி சிறப்பிக்கப்படும். 11ம் தேதி மாலை சிறப்பு ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு இயக்குனர் ஜாண் பென்சன், நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் ஆகியோர் தலைமையில் நடக்கிறது


