ஜீவா ( சனவரி 4, 1984) தமிழ்த் திரைப்பட நடிகராவார். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி இவரது தந்தையும், திரைப்பட நடிகரான ரமேஷ் இவரது உடன் பிறந்தவரும் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதற்காக அறியப்படுகிறார்.


