திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தொன்மையான இடங்கள் மற்றும் படைப்புக்களை விளக்கும் நாள்காட்டி 2023 யை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் தயார் செய்துள்ளது. துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர் அவர்கள் வழிகாட்டுதலுடன், பதிவர் அண்ணாதுரை அவர் ஆலோசனையில் முனைவர் சுதாகரன் அவர்கள் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த குழுவில் புகைப்படம் எடுத்து தரும் பொறுப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நியூஸ் 7 ஸ்ரீவைகுண்டம் நிருபர் சுடலைமணி செல்வன், தி இந்து தமிழ் திசை புகைப்பட கலைஞர் லெட்சுமி அருண், முனைவர் பட்ட ஆய்வர் அபிஷ்விக்னேஷ், உயிர் தொழில் நுட்ப துறை மாணவர் ஜான் சிங் ஆகியோர் பங்காற்றினர். சதக்கப்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை தலைவர் சௌந்தர மகாதேவன், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வரலாற்றுத்துறை பேராசிரியர் இராமசுப்பிமணியன் இந்த கலெண்டர் அமைப்பில் வாசகங்களை எழுதி கொடுத்தனர்.
இந்த காலெண்டர் வெளியீடு மற்றும் பங்ககேற்றவர்களுககு சான்று வழங்கும் நிகழ்வு மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் கலந்துகொண்டனர்.


