ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சிமன்ற அலுவலகம் ஆகியவற்றை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் – காயாமொழி தாண்டவன்காடு வழியாகவும், திருச்செந்தூர் – நாசரேத் காயாமொழி, மூலக்கரை வழியாகவும், சாத்தான்குளம் – முதலூர், திருவைகுண்டம் – மணக்கரை ஆழ்வார்கற்குளம் வழியாகவும், திருவைகுண்டம் – வல்லநாடு, திருச்செந்தூர் – ஏரல் சிவத்தையாபுரம் வழியாக என மொத்தம் 5 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியத்திட்டம் 2024-2025 கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினையும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குருகாட்டூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II 2025-2026 கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தினையும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
மேலும், அங்கமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. இரா.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கௌதம், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவஆனந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


