தூத்துக்குடி சிவன் கோவிலில் வருகிற 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), விவேகானந்தா கேந்திரம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் சார்பில் தூத்துக்குடி சிவன் கோவிலில் தீமைகளை விலக்கி, செல்வத்தையும், நிம்மதியையும் தரக்கூடிய விசேஷமான திருவிளக்கு பூஜை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு வருகிற 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது. பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவரும் மஞ்சள், குங்குமம், மற்றும் பூஜைபொருட்கள் வழங்கப்படும். இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க பக்தர்களுக்கு விவேகானந்தா கேந்திரம் தூத்துக்குடி கிளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


