நாசரேத் அருகிலுள்ள தென்கரைகுளம் பாசன கால்வாய் மடை எண் 11, 12 தூர்வாரும் பணியை கிளமெண்ட் எபனேசர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நாசரேத் அருகிலுள்ள தென்கரைக் குளம் பாசன கால்வாய் மடை எண் 11,12 தூர் வாரும் பணியை கிளமெண்ட் எபனேசர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழியத்தின் ஒரு அங்கமான புது வாழ்வு சங்கம் சார்பில் பல்வேறு சமூகப் பணிகள் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிக ளின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இதில் திருநெல்வேலி தாமிரபரணி வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட தாமிர பரணி மருதூர் மேலக்கால் தென்கரைக்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் தென்கரைக்குளம் பாசன விவசாய சங்க பொருளாளர் பாஸ்கர் புது வாழ்வு சங்க நிர்வாகிகளி டம் நாசரேத் அருகிலுள்ள தென்கரைக்குளம் பாசன மடை எண் 11,12 தூர் வாரும் பணியை செய்து தருமாறு கோரிக்கை வைத்தார். இதன் பேரில் மடை எண் 11,12 தூர் வாரும் பணியை கிளமென்ட் எபனேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக சமூக சேவை பொறுப்பாளர் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார்.மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். இந்த வாய்க்கால்கள் தூர் வாருவதின் மூலம் சுமார் 2300 ஹெக்டேர் நிலம் பயன் பெறுகின்றன. இதன் மூலம் கொமந்தான் நகர், கீழ வெள்ளமடம், மேல வெள்ளமடம், செம்பூர், தேமான்குளம்,சுப்பிரமணியபுரம், சொர்ணம்புதூர், நாசரேத் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.
இந்நிகழ்வில் ஊர் தலைவர் ஆறுமுக நயினார், தென்கரைக்குளம் நீரினை பயன்படுத்துவோர் பாசன சங்க பொருளாளர் ஆறுமுகநயினார் என்ற பாஸ்கர் மற்றும் நிஜைன்ட், சபித் சாம் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் தலைமையில் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந் தனர்.


