1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1949 – தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975 – மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1990 – காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார் 2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.


