திருச்செந்தூர் கடற்கரையில் கிடக்கும் பழைய கல்சிலைகளால் பக்தர்கள் சிரமம். அப்புறப்படுத்த பக்தர்கள் கோரிக்கை.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் கடந்த சில தினங்களாக கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்படுகிறது.
இதனால் கடலுக்குள் வீசப்பட்ட பழைய சேதமடைந்த சிலைகள் என 10க்கும் மேற்பட்ட சிலைகள் கடற்கரையில் தேங்கியுள்ளது. இதனால் கடற்கரையில் நீராடும் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே கடற்கரையில் ஒதுங்கியுள்ள சிலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


