கோவில்பட்டியில் 102 மாணவர்களுக்கு கலைஞர் உரை எழுதிய திருக்குறள் புத்தகத்தை திமுகவினர் இலவசமாக வழங்கினர்.
தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. செம்மொழி நாளாக கொண்டாடப்படும் இந்நாளில் திமுகவினர் உற்சாகமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் தலைமையில் பங்களா தெருவில் 22 வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரில் ஏற்பாட்டில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் 102 பேருக்கு கலைஞர் எழுதிய திருக்குறள் புத்தகங்களை இலவசமாக வழங்கினர்.


