தூத்துக்குடி அருகே தருவைகுளம் கிராமத்தில் தூய மைக்கேல் கைப்பந்து பயிற்சி கழகம் சார்பில் 14வது ஆண்டாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் 110 பேர் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர். தருவைக்குளத்தைச் சேர்ந்த சூசைமிக்கேல் அந்தோணி முத்து மைக்கேலம்மாள் நினைவாக அறக்கட்டளை வைத்து வருடம் தோறும் விளையாடும் மாணவர்களுக்கு விளையாட்டு உப கரணங்கள் வழங்கி வருகின்றார்கள்.
இதுபோன்று தூத்துக்குடி தொழிலதிபர் ராம்ராஜ் சீருடை வழங்கி வருகிறார்கள். தற்பொழுது இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி அமைச்சர் கீதாஜீவன் அவர்களின் மகன் டாக்டர் மகிழ் ஜான் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகிறார்கள். பல விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரும் பயிற்சி ஆசிரியர் ரவிகாந்த் தெரிவித்தார். கோவில்பட்டியில் ஹாக்கி மைதானம் அமைத்தது போல் தருவைக்குளத்தில் கைப்பந்து மைதானம் அமைத்து தர மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


