சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்குதல்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கும் நிகழ்ச்சி சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து மருத்துவ அலுவலர் டாக்டர்.பே.புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிங்கத்தாகுறிச்சி மருத்துவ அலுவலர் டாக்டர்.பே .புவனேஸ்வரி காசநோயாளிகளுக்கு சத்துமாவு வழங்கி பேசுகையில், நாம் வழங்கிய சத்துமாவு சி.எஸ்.ஆர். நிதி மூலம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது. சந்து மாவு காசநோயாளிகளுக்கு தொடர்ந்து ஆறு மாதம் வழங்கப்பட்டு நோயாளிகளின் எடை அளவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்பாடு செய்து கொடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்க்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்கள்.
செவிலியர் ச.ராமலெட்சுமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ர.செல்வராணி சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


