செய்தங்கநல்லூரில் 100 சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் காசிராஜன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி துண்டி பிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் துவங்கி, சந்தை மற்றும் சுற்றுப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட சமூக நலத்துறை மைய நிர்வாகி ஜெலின், கிராம நிர்வாக அதிகாரிகள் தெற்குகாரசேரி கந்தசுப்பு, செய்துங்கநல்லூர் சக்தி விக்னேஷ்வரன், விட்டிலாபுரம் லெட்சுமி , கிராம உதயம் தனிஅலுவலர் ராமசந்திரன், பகுதி அலுவலர் கண்ணன், தன்னார்வலர் செல்வன் துரை உள்பட கிராம உதவியாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட சமூக நலத்துறை, ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறையினர் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து செய்திருந்தது.