ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நத்தம் விஜயாசன பெருமாள் திருக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 திவ்ய தேசங்களில் நம்மாழ்வாரால் பாடப்பெற்ற திருப்பதிகளில் ஒன்றாகவும், நவதிருப்பதி ஸ்தலங்களில் 2 வது ஸ்தலமாகவும் சந்திரனுக்கு அதிபதியாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நத்தம் ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பிரம்மோற்சவ விழா சிறப்பானது. இந்த வருடத்திற்கான மாசி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்தடன் துவங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. அதனை தொடர்ந்து கொடிக்கு பூஜைகள் நடைபெற்று காலை 12.00 மணி அளவில் கொடியேற்றம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்றிலிருந்து 12 தினங்கள் நடைபெறும் பிரம்மோற்ச விழாவில் சுவாமி நாள்தோறும் காலையில் திருமஞ்சனம் மற்றும் தோளுக்கினியானிலும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடும் நடைபெறுகின்றது. மாசி கருடசேவை 7ம்தேதியும், 13ம்தேதி தாமிரபரணி நதிக்கரையில் தீர்த்தவாரியும் 14ம் தேதி புஷ்பயாகமும் நடைபெறுகிறது.


