தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி, மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் காசநோய் ஒழிப்பு பணியில் சுகாதார துறையுடன் இணைந்து செயல்பட்ட டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளைக்கு துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர்.க.சுந்தரலிங்கம் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழை ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள இரட்டை திருப்பதி டிவிஎஸ் அறக்கட்டளையின் கள இயக்குனர் பாபு அவர்களிடம் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்அ.அப்துல் ரஹீம் ஹீரா வழங்கினார்.
இந்நிகழ்வில் டிவிஎஸ் அறக்கட்டளையின் பிளானர் ரகுவரன்,
சமுதாய வளர்ச்சி அலுவலர் பரமசிவன்ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.


