காற்றையும் மழையையும் கடந்து
எவ்வளவுதான் கடலில் கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடைசியில் பலிபீடத்தில் தான் கிடத்தபடுகிறோம்.
எங்களின் கதறலும் அலறலும்
அரசாங்கத்தின் காதுகளை கடந்தே
செல்கிறது. அவர்கள் என்றுமே உள் வாங்குவதில்லை.
ஏனென்றால் இழப்பின் வலி அவர்களுக்கு புரிவதில்லை..
இழந்தவனுக்கும் அதை உணர்ந்தவனுக்கும் மட்டும் தான்
வலியை உணரமுடியும்.
நம் பிரச்சனைகளை அரசு காது கொடுத்து கேட்க நாம் என்ன
செய்வது.
அரசியல் ஆளுமைகள் வேண்டும்..
அதைவிட அரசு ஆளுமைகள் வேண்டும் .
வரும் தலைமுறைகளை அரசு ஆளுமைகளாக உருவாக்க வேண்டுமென்று இன்று நம் பள்ளியில்
கல்லாமொழி மீனவர் கல்விமையம் நிறுவனர் சந்தியா சகேஸ்
அடிகளாரின் உதவியுடன் எம் பள்ளியில் போட்டி தேர்வுக்கான பயிற்ச்சி வகுப்புகளை தொடங்கிவிட்டோம்.
கடலிலிருந்து கடலை பார்த்தது போதும்.
இனி .. நிலத்திலிருந்து கடலை பார்ப்போம்.
பாம்பனை சேர்ந்த எம் பள்ளியின் முன்னால் மாணவி ப்ரெஸ்யா இனிகோ இளையராஜா போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது திருச்செந்தூரில் ரெவின்யு இன்ஸ்பெக்டராக ( R .I ) பனியாற்றி வருகிறார். தான் கஸ்ட்டப்பட்டு கடலுக்கு சென்றாலும் தன் மனைவியை படிக்கவைத்து இன்று அரசு ஆளுமையாக அழகு பார்த்திருக்கும் இனிகோ இளையராஜாவை சமூகம் வாழ்த்துகிறது. உன்னால் நம் சமூகம் பெருமையடைகிறது.


