தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் டெர்மினலை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சரக்கு கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தற்போது டெர்மினலை மூடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனைக் கண்டித்து பிஎஸஏ சிகால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


