தூத்துக்குடியில் பிரதான சாலைகளுள் ஒன்றான ஜார்ஜ் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஜார்ஜ் ரோடு – சிவந்தாகுளம் சாலை பல ஆண்டு காலமாகவே சேதமடைந்து கொண்டே இருக்கிறது. சரியான முறையில் சாலைகளை முறையான தெளிவாக திட்டமிடல் இல்லாமல் சாலைகளை அமைப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு மழை பெய்தாலும் சாலை சேதம் அடைந்து விடுகிறது.
இதையடுத்து அவசர கால அடிப்படையில் ஒட்டுப்போடும் வேலை மட்டும் நடக்கிறது. இந்த சாலையில் மாதா கோயில், தீயணைப்பு நிலையம், காராபேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, லசால் மேல்நிலைப்பள்ளி, தஸ்நேவிஸ் மேல்நிலைப்பள்ளி, அம்மா உணவகம், மயானம், மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானம் போன்றவை அமைந்துள்ளன.
தினமும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள், காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் என பலதரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் முக்கியமான சாலையாக விளங்கும் இச்சாலையை முறையாக முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


