மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை வீல்சேர் கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு மக்கள் மாளிகையில் (ஆளுநர் மாளிகை) நடைபெற்ற சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின விழாவில், வீல்சேர் கிரிக்கெட் அணியினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மக்கள் மாளிகை என்ற மாற்றத்திற்கு பின் அங்கு நடந்த முதல் அரசு விழாவில் மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் சாதனையாளர்களாக பங்கெடுத்ததில் பெரு மகிழ்ச்சியும் நிறைவும் பெறுவதாக வீரர்கள் தெரிவித்தனர்.


