குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மேலநீலிதநல்லூர் ஒன்றியம், ஆயாள்பட்டி மகாவிஷ்ணு நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனையான பெரியத்தாய் மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து தனது இல்லத்திற்கு வந்து சந்தித்த மாற்றுத்திறனாளி வீராங்கனை பெரியத்தாயை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பாராட்டியதுடன் மென்மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.


