தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் எரிபொருள் பெற்று நதியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது இந்த பணி ஆறாம்பண்ணையில் நடைபெறுகிறது. இந்த பணியை தொடர்ந்து நடத்து வதற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களின் நடவடிக்கைபடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் சிறப்பாக இந்த பணி நடைபெறுகிறது. இந்த பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மருதூர் மேலக்கால் உதவி பொறியாளர் சதீஷ், கீழக்கால் உதவி பொறியாளர் அமீர் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து பணிசெய்து கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சி தலைவர், பொதுப்பணித்துறையினர், எக்ஸ்னோரோ நிறுவனத்தினரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்த பணியில் ஈடுபட்டு வரும் பொக்கலின் ஓட்டுனர் மணிகண்டன், மற்றும் பணி புரிந்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி ஆறாம்பண்ணை தாமிரபரணி கரையில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சேக்அப்துல் காதர் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். பா.ம. க.மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஏ கஸ்ஸாலி பணி புரிந்தவர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பன்னீர், சுடலை மணி, துணை தலைவர் அப்துல் கனி, முகம்மது அலி ஜின்னா, முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


