செய்துங்கநநல்லூர் அரசு பொது நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. வாசகர் வட்டத் தலைவர் திருமலை நம்பி தலைமை தாங்கினர். ஓய்வு பெற்ற தொலை தொடர்ப்பு அலுவலர் முத்து சாமி முன்னலை வகித்தார். நூலகத்துக்கு புதிய கட்டிம் கட்ட 15 லட்ச ரூபாய் தனது நிதி உதவி வழங்கிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. – அனவரதநல்லூர்அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் 43 பேர் உறுப்பினராக சேருவதற்கு உதவி புரிந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பட்டுராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தபால் துறை ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா, நாராயணன், கிருஷ்ணன், சாகுல் அமது, கோபாலகிருஷ்ணன், சந்திரா, ருக்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர், நூலகர் சம்சுதீன் நன்றி கூறினார்.


