"ஆ.ராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்?" என்ற தலைப்பில் கடந்த 2010 டிசம்பர் திங்கள் 14-ஆம் நாள், கோவையில் நடந்த திராவிடர்கழக பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.
கி. வீரமணி (பிறப்பு: 02 டிசம்பர் 1933) திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் பெரியாரால் 1962 இல் நியமிக்கப்பட்டவர்] பெரியாரின் மறைவுக்குப்பின்பும், மணியம்மையாரின் மறைவுக்குப்பின்பும் தொடர்ந்து இயக்கத்தை நடத்தி வருகிறார்.[ 2003 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்ஆங்கிலத்தில் (The Modern Rationalist) மாத இதழ், தமிழில் விடுதலை (நாளேடு), உண்மை (மாதமிருமுறை ஏடு), பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான மாத ஏடு) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து வருகிறார். பெரியார் அறக்கட்டளை மூலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். தமிழகத்தையும் தாண்டி வெளிநாடுகளிலும் பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார்]
தென் ஆற்காடு மாவட்டம், கடலூர் அருகே பழையபட்டினத்தில் வாழ்ந்த சி. எஸ். கிருஷ்ணசாமி – மீனாட்சி தம்பதியருக்கு 2 டிசம்பர் 1933 அன்று மூன்றாவது மகனாக பிறந்தவர் வீரமணி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி ஆகும்.[1]12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட முதலாவது திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றினார். 17 வயதிற்குள் கலந்து கொண்ட நிகழ்வுகள் 227, கலந்து கொண்ட மாநாடுகள் 16, பயணம் செய்த தூரம் 23422 கி.மீ. 23 வயதில் முதுகலை வகுப்பினை முடித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். 25 வயதில் கடலூர் திராவிடநாடு பிரிவினை மாநாட்டிற்கு வருகை புரிந்தோரின் உடைமைகளைப் பாதுகாக்கும் பணியினைச் செய்தார்.
27 வயதில் சட்ட மேற்படிப்புக் கல்வியை முடித்ததோடு தேசப்பட எரிப்புப் போரிலும் ஈடுபட்டு பெரியாருடன் தடுப்புக் காவல் சட்டப்படி கைதானார். திராவிடர் கழக பொதுச்செயலாளராகவும் ஆனார். 29 வயதில் விடுதலை நாளிதழின் நிருவாக ஆசிரியர் பொறுப்பேற்றார். 38 வயதில் ஆங்கில மாத இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். 43 வயதில் நெருக்கடி நிலையில் (மிசா) கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 65 வயதில் (1998) பெரியார் பிஞ்சு குழந்தைகள் இதழைத் தொடங்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.
கி. வீரமணி, 1958-இல் -மோகனா என்பவரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். மகன்களில் ஒருவரான அன்புராஜ் 2009-ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழக தலைமை நிலையச் செய்லாளராக பதவியில் உள்ளார்.[2]மேலும் அன்புராஜ் பெரியார், மணியம்மை அறக்கட்டளைகளில் பதவிகள் வகிக்கிறார்.
1962 இல் விடுதலை நாளிதழ் ஆசிரியர் குத்தூசி குருசாமி பொறுப்பு விலகிய நிலையில் பொறுப்பேற்ற இவர், தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என இரண்டு பதிப்புகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆங்கில (The Modern Rationalist) இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணைய தளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைப் பரப்புகின்றார்.
• கி. வீரமணி தனது மகன் அன்புராஜை திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளராக நியமித்ததற்கு, திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களும், பின்னர் 1996-இல் பெரியார் திராவிடர் கழகத்தை நிறுவியவர்களான கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராஜேந்திரன் மற்றும் கொளத்தூர் மணி[3] போன்றவர்கள் திராவிடர் கழகத்தின் தலைமை பீடத்தில், மு. கருணாநிதி போன்று, திராவிடர் கழகத்தில் கி. வீரமணி குடும்ப அரசியலை புகுத்தியுள்ளார் எனக் கடும் எதிரிப்புத் தெரிவித்தனர்.[4]
• பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் போன்றவர்கள் ஈ. வெ. இராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கைகளை பரப்புவதற்கு, குடி அரசு இதழில் ஈ. வெ. இராமசாமி எழுதிய கட்டுரைகளைத் தொகுப்பை மலிவு விலையில் நூலாக வெளியிட முயற்சி மேற்கொண்டனர். இம்முயற்சிக்கு கி.வீரமணி தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பெரியாரின் சொத்துக்களை நிர்வகிப்பதில், அவர் தலைவாரயிருந்த பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்குத் தான் உரிமை என்றும், பெரியாரின் எழுத்துக்களும் அவருக்கே சொந்தம் என்றும், வேறு யாரும் பெரியார் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று கூறினார். 2009-இல் இவ்வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தன் தீர்ப்புரையில், “பெரியார் இரண்டு உலகப் போர்களுக்கிடையேயான காலகட்டத்தில் குடியரசு இதழை கொண்டு வந்தார். இதற்காக ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். எந்தவித பலனையும் எதிர்பாராமல் சமூக சீர்திருத்தத்துக்கான தனது பணியை தொடர்ந்தார். 2009-ஆம் ஆண்டு, பெரியாரின் 130வது ஆண்டு. இந்த ஆண்டில், பெரியாரின் எழுத்துக்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுவது மிகுந்த வேதனையை தருகிறது. இவ்வழக்குகளால், பெரியாரின் சிந்தனைகள், நீதிமன்ற கோப்புகளுக்குள் முடங்கி விடக் கூடாது என்று கூறியுள்ளது. [5] இதை எதிர்த்து, வீரமணி, மேல் முறையீடு செய்து, இத்தீர்ப்புக்கு தடையாணை பெற்றார்.
1. தலைவர் – திராவிடர் கழகம்
2. ஆசிரியர் – விடுதலை நாளிதழ்
3. ஆசிரியர் – உண்மை (இதழ்) (மாதம் இரு முறை)
4. ஆசிரிய – பெரியார் பிஞ்சு (இதழ்) (குழந்தைகளுக்கானது)
5. தலைவர் – பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்
6. துணை வேந்தர் – பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
7. தலைவர் – பெரியார் திடல்
8. தலைவர் – பெரியார் பொது அறக்கட்டளை
9. தலைவர் – பெரியார் ஈ. வெ. இராமசாமி-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை[6]
10. தலைவர் – பெரியார் மையம், புது தில்லி
11. தலைவர்: அ) பெரியார் இந்திய ஆட்சிப் பணி & இந்தியக் காவல் பணி பயிற்சி மையம், சென்னை. ஆ) பெரியார் மணியம்மை மருத்துவமனைகள் – திருச்சி, தஞ்சாவூர், சோழங்கநல்லூர் மற்றும் சேலம். இ) பெரியார் சுயமரியாதை திருமண மையம், சென்னை. ஈ) பெரியார் புரம், வல்லம்


