ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள பப்பு நியூ கென்யா நாட்டை சேர்ந்த கவர்னர் சுசீந்திரன் அவர்கள் களரி அடிமுறை பாகம் 2 என்ற நூலுக்கு வாழ்த்துரை தந்துள்ளார். அவர் நமது ஊரை சேர்ந்தவர் அவ்வூரில் சென்று தேர்தல் மூலம் அவ்வூர் மக்களின் வாக்கையும் பெற்று தற்போது கவர்னராக பயணிக்கிறார். அந்த நாட்டு மொழியில் நமது திருக்குறளை மொழிபெயர்த்து நமது பாரத பிரதமர் மோடி கரத்தினால் அவ்வூரில் வைத்து வெளியிட்டும் உள்ளார். இதற்கு அவரது துணைவியார்தாமிரபரணியின் மைந்தரான சுபா அபர்ணா சுசீந்திரன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உலக களரி அடிமுறை (அமெரிக்கா) மூலமாக எனது களரி அடிமுறை பாகம் 2 ( நிறுவனரின் தாயகப்பயணம்) நூல் முழு வண்ண நூலாக தயராகிறது. அதற்காக அனுமதி வழங்கிய நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தின குமார் அவர்களுக்கு நன்றி.

அந்த வாழ்த்துரையில் என்ன கூறியிருக்கிறார்கள் என காணலாம்.
நம் தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கிய வீரக் கலை களரி என்று அறிந்துள்ளேன். இந்த விளையாட்டில் தெக்கன் களரி, வடக்கன் களரி மற்றும் மத்திய களரி ஆகிய 3 வகைகள் உள்ளது எனவும், இதில் தெக்கன் களரியை அகத்திய முனிவரும், வடக்கன் களரியை பரசுராமனும் அறிமுகப்படுத்தியதாக என் முன்னோர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
நம் உடலில் மறைந்திருக்கும் முக்கியமான வர்மங்களை கணித்து அந்த இடத்தில் எதிரியை தாக்கி நிலை குலைய செய்யும் கலைதான் களரி நாடி நரம்புகளை அடிப்படையாக கொண்டு இந்தக்கலை திகழ்கிறது. ஆங்கிலேயர் நமது நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நமது நாட்டின் மன்னர் ஆட்சியில் இருந்த போர்வீரர்கள் அனைவரும் தற்காப்பு கலையை கற்று இருந்தனர். அதனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை. இதை அறிந்த ஆங்கிலேயர் இந்த தற்காப்பு கலைகளை அடியோடு ஒழிக்க முடிவு செய்தனர். எனவே ஆங்கிலேயருக்கு தெரியாமல் இந்த கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இதற்காக பல அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதில் மறைந்திருந்து ரகசிய பயிற்சி அளித்தார்கள் கேள்விப்பட்டு உள்ளேன்.
களரி அடிமுறையில் இன்னும் ஏராளமான பாரம்பரிய வீர கலைகள் உள்ளன. இன்றைய குழந்தைகள் இதுபோன்ற விளையாட்டுகளைப் பற்றி பெரிதும் அறிந்து கொள்ளாமல் டேக்குவான் டோ கராத்தே குங்பூ போன்ற வெளிநாட்டு விளையாட்டுகளில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அரசாங்கமும் இதற்காக குழுக்களை அமைத்து புதிய விளையாட்டுகளை கொண்டு வர வேண்டும் அதை கற்றுக் கொடுக்க பல்வேறு திட்டங்களை ஏற்க வேண்டும். அதற்கு அந்த விளையாட்டுகளைப் பற்றி தெரிய வேண்டும் அல்லவா?
ஆனால் இவ்வளவு புகழ்வாய்ந்த இந்தக் கலையை பற்றி நாம் பெரிய அளவில் தெரிந்திருக்கிறோமா என்றால் இல்லை. இதைப் பற்றி நிறைய புத்தகங்கள் வெளியாகி இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. தென் தமிழகம் இன்று உலக அளவில் பேசப்படுகிறது என்றால் குறிப்பாக தாமிரபரணி நாகரீகம் பொருனை நாகரிகம் என்று அழைக்கப்படக் கூடிய ஆதிச்சநல்லூர் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது என்றால் அதற்கு காரணமானவர், எழுத்தாளர் மண்ணின் மைந்தர் தமிழ்ச் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள்.
மண்ணையும் மக்களையும் அதன் பெருமையும் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் அவரின் சீரிய முயற்சியில் பல்லாண்டுகள் ஆய்வுகளால் உருவானது தான் களரி அடிமுறை பாகம் ஒன்று அந்த புத்தகத்தின் வெற்றிக்கு பிறகு களரி அடிமுறை பாகம் 2 என்ற இந்த புத்தகத்தை வெளியிடுகிறார். இதை முழுவதும் படித்தேன். இந்த புத்தகத்தில் உள்ள தகவல்களான களரி கலையை பற்றிய தகவல்கள் அடிமுறை கலையை பற்றிய தகவல்கள் சிலம்பத்தோடு இவை எப்படி ஒத்துப் போகின்றன. சுவடு என்ற கலை எப்படி இருக்கிறது. நம் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களான காணி இன மக்கள் எப்படி இந்த கலையை தங்கள் பாரம்பரியத்தோடு வளர்த்து வருகிறார்கள்.
. இந்த கலைக்கும் உள்ள தொடர்பு என்று சங்க காலம் தொடங்கி இந்த காலம் வரைக்கும் களரி அடிமுறை போன்ற . வீர கலைகளில் வீச்சு வரலாறு அதில் ஒளிந்துள்ள அறிவியல் தன்மைகள் பெருமைகள் என்று எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் இது போன்று பல நூறு புத்தகங்களை அவர் கொண்டு வர வேண்டும் என்று பப்புவா நியூ கினி நாட்டிலிருந்து என்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
– பப்பு நியூ கென்யா நாட்டின் கவர்னர் மாண்புமிகு சுசீந்திரன் முத்துவேல் எம்.பி.


