முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான லெட்சுமி நரசிம்மர், வீரபாண்டீஸ்வர், ராம விநாயகர் கோயில் ஒரே வளாகத்தில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது திருப்பணி செய்வதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகிறார்கள். இதற்கான நடவடிக்கையை அறநிலைத்துறையும் செய்து வருகிறது. இந்த ஆலயத்தில் சோலார் விளக்கு அமைக்க வேண்டும் என்று பக்தர் சார்பில் கோரிக்கை எழுந்தது. இதற்காக கோயில் இன்ஸ்பெக்டர் நம்பி நடவடிக்கை எடுத்தார். அதன் படி விரைவில் சேலார் விளக்கு பொறுத்தப்பட உள்ளது. இதற்காக இடத்தேர்வு மற்றும் பார்வையிட சோலார் விளக்கு அமைப்பாளர் கிறிஷ்ணதாஸ் வருகை புரிந்தார். அவருடன் அறங்காவலர் குழு சுடலைமணி, அர்ச்சகர் சேகர் உடன் இருந்தனர்.


