பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆற்றில் மனுவை போடுவதாக சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயில் தாமிரபரணி ஆறு கலக்கிறது
வற்றாத ஜீவநதியாகும்
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களுக்கு விவசாய தேவைகளையும் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைகளையும் தாமிரபரணி ஆறு பூர்த்தி செய்கிறது
இந்த நதி தற்போது படிப்படியாக அழிந்து கொண்டு வருகிறது திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம், குறுக்குத்துறை, சிஎன் கிராமம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 16 இடங்களில் கழிவுநீர்கள் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை இருந்து வரும் கழிவு நீர் ஆற்றின் ஓரத்தில் சேமித்து அந்த தண்ணீரை சுத்திகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அந்த பணிகள் சரிவர நடைபெறவில்லை மீண்டும் அதே போல தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையிலும் இந்த வழக்கு தற்போது விசாரணை உள்ளது
திருநெல்வேலி மாநகராட்சி தாமிரபரணி ஆற்றை உரிமை கூறும் நிலையில் ஏன் கழிவு நீர் ஓடைகளை அதில் கலக்க வைக்கிறீர்கள் என்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளனர்
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை ஒட்டி அதனை தடுத்து நிறுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சமூக ஆர்வலர் சிராஜ் கையில் பதாகையுடன் நெல்லை மாநகராட்சியில் உள்ள துணை மேயர் ராஜுவிடம் மனு கொண்டு வந்தார் பின்னர் அந்த மனுவை துணை மேயரிடம் வழங்க மறுத்துவிட்டார். நான் பலமுறை உங்களிடம் மனு கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகமும் மேயர் துணை மேயர் மற்றும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .இனியும் தாமிரபரணி பிரச்சனை தொடர்பாக உங்களை நம்பி எந்த நன்மையும் இல்லை ஆகவே இந்த மனுவை நானே தாமிரபரணி ஆற்றில் போட்டு விட்டு செல்கிறேன் என தெரிவித்து விட்டு மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொக்கிரகுளம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள தாமிரபரணி ஆற்றில் அந்த மனுவை ஆற்றில் போட்டார்