தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி படத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 1ம் கேட் காந்தி சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட மகாத்மா காந்தி திருவுருவபடத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, மாநகர செயலாளர் இக்னேசியஸ், கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், மாநகர பொது செயலாளர் மைக்கேல் பிரபாகரன், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, கண்ணன், எட்வர்ட், சேகர், பார்த்திபன் சுரேஷ்குமார், வார்டு தலைவர்கள் நேரு, வாசி ராஜன் சேவியர் மிஷியர், ஜான் வெஸ்லி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.