தூத்துக்குடி மாவடத்தினை சேர்ந்த பிரபல எழுத்தாளர் நெல்லை கவிநேசன். இவர் பெண்கள் சட்டம், கல்வி உள்பட சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 37 வருடங்களுக்கு முன்னால் எழுதிய தமிழ் நூல் ,சட்டம் சந்தித்த பெண்கள். 1987 பார்த்திபன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருந்தது. தற்போது இந்த நூலை பேராசிரியர் ஆழ்வார் ஆங்கில நூலாக்கியுள்ளார். பேராசிரியர் ஆழ்வார் , நெல்லை கவிநேசன் அவர்களின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்துக்கது. இந்த நூலை செய்துங்கநல்லூரில் வைத்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் அறிமுகம் படுத்தினார். அருகில் எழுத்தாளர் காமராசு செல்வன் இருந்தார். இந்த நூலை பற்றி நெல்லை கவிநேசன் கூறும்போது, ஒரு எழுத்தாளனுக்கு பெருமை தனது நூல் பல்வேறு மொழிகளில் வருவது ஆகும். என்னுடைய சட்டம் சந்தித்த பெண்கள் நூல் 1987 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூலை எனது ஆசிரியர் பேராசிரியர் ஆழ்வார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூலை குமரன் பப்பளிகேசன் வெளியிட்டு உள்ளது. எனது நூலை எனது ஆசிரியரேஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருப்பது எனக்கு சந்தோசத்தினை தருகிறது. என்று கூறினார்.