நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதா ஆலயத்திருவிழா வருகிற 06 ஆம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்குகிறது.
தூத்துக்குடி மறை மாவட்டம், பிரகாசபுரம் பங்கு புதுமைகளின் நாயகியாம், பிரகாசபுரம் பரிசுத்த பரலோகமாதாஆலய 145-வது திரு விழா வருகிற 06.08.2024 செவ்வாய் கிழமை மரியாள் தாழ்ச்சியின் சிக ரம் என்ற தலைப்பில் காலை 5:40 மணிக்கு செபமாலை பவனி, திருப் பலி சோமநாதபேரி பங்குத்தந்தைஅருட்பணி ஜெகதீஸ் அடிகளார்
தலைமையில் நடைபெறுகிறது.
காலை ஜெபமாலை திருப்பலியைமின்வாரிய ஊழியர்களும், அனை த்து அன்பியங்களும் சிறப்பு செய் கின்றனர். மாலை 6:30 மணிக்கு செபமாலை,கொடி பவனியும், மாலை 7மணிக்கு கொடியேற்றம்மறையுரை, நற்கருணை ஆசீர்மன்னார்புரம் பணிகளின் ஒருங்கி ணைப்பாளர் அருட்பணி நெல்சன் அடிகளார் தலைமையில் நடைபெ றுகிறது.மறையுரையை அருட்பணி ரெக்ஸ் லூமின் (கனடா) ஆற்றுகி றார்.சிறப்பு விருந்தினராக பிரகாச புரம் தூய திரித்துவ ஆலய சேகரத்தலைவர் அருட்திரு எம். நவராஜ்கலந்து கொள்கிறார். முதலாம் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாக ஜாஸ் பேண்ட் கென்னடி இசைக் குழுவினரின் இசை சங்கமம் நிகழ்வு நடைபெறுகிறது.
2 ஆம் திருவிழாவான 07.08.2024 புதன்கிழமை மரியாள் கிறிஸ்தவர் களின் அடைக்கலம் என்ற தலைப் பில் காலை 5:40 மணிக்கு செபமா லை பவனி,திருப்பலி,தைலாபுரம் பங்குத்தந்தை அருட்பணி. ராபின் தலைமையில் நடைபெறுகிறது. 2-ஆம் திருவிழாவில் பாலர் சபை யார், நற்கருணை வீரர் சபையார், ஞாயிறு மறைக்கல்வி, புனித அந் தோணியார் அன்பியம் ஆகியோர்சிறப்பு செய்கின்றனர்.மாலை 6:30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.சிறப்பு நிகழ்வாக நற்செய்திப் பெரு விழா தெ.கள்ளிகுளம் புனித பனி மய அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர், தாளாளருமானஅருட்பணி எஸ்.கே.மணி தலைமை யில் நடைபெறுகிறது.
3ஆம் திருவிழாவான 08.08.2024 வியாழக்கிழமை மரியாள் ஆண்டவ ரின் அடிமை என்ற தலைப்பில் காலை 5:40 மணிக்கு செபமாலை பவனி, திருப்பலி குரும்பூர் பங்குத் தந்தை அருட்பணி பபிஸ்டன் தலை மையில் நடக்கிறது.சேதுக்குவாய்த் தான்பங்குத்தந்தை அருட்பணிபால் ரோமன் மறையுரை ஆற்றுகிறார்.மூன்றாம் திருவிழாவில் புனித அமல உற்பவ மாதா சபையார், புனித செபஸ்தியார் அன்பியம்ஆகியோர் சிறப்பு செய்கின்றனர். மாலை 6:30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.சிறப்பு நிகழ்வாக நற்செய்திப் பெரு விழாவாக பாளையங்கோட்டைசகோ. கென்னடி மற்றும் சோபியாஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
4 ஆம் திருவிழாவான 09.08.2024 வெள்ளிக்கிழமை மரியாள் பெண்க ளுள் ஆசீர் பெற்றவர் என்ற தலைப் பில் காலை 5:40 மணிக்கு செபமா லை பவனி, திருப்பலி நொச்சிக்கு ளம் பங்குத்தந்தை அருட்பணி ரத் தினராஜ் தலைமையில் நடக்கிறது.நான்காம் திருவிழாவில் புனித தொன்போஸ்கோ சபையார், புனித கபிரியேல் அன்பியம் ஆகியோர் சிறப்பு செய்கின்றனர்.மாலை 6:30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் கருங்கடல் பங் குத்தந்தை அருட்பணி பாக்கியஜோ சப்ராஜ் தலைமையில் நடக்கிறது. சிறப்பு நிகழ்வாக கச்சனாவிளைசென்ட் மேரீஸ் பெண்கள் உயர்நி லைப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
5 ஆம் திருவிழாவான 10.08.2024 சனிக்கிழமை மரியாள் பரலோகத் தின்வாசல் என்றதலைப்பில்காலை 5:40 மணிக்கு செபமாலை பவனி, திருப்பலி ஸ்ரீவைகுண்டம் பங்குத் தந்தை அருட்பணி பிளேவியன்தலைமையில் நடைபெறுகிறது.ஐந்தாம் திருவிழாவன்று புனித பிரான்சிஸ் அசிசி சபையார், புனித தோமையார் அன்பியம் ஆகியோர் சிறப்பு செய்கின்றனர். மாலை 6:30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் வள்ளியூர் அருட் பணி இசிதோர் தலைமையில் நடைபெறுகிறது.சிறப்பு நிகழ்வாக இரவு தோப்பூர் இறைமக்கள் சார் பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
6 ஆம் திருவிழாவான 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை மரியாள் விசு வாசத்தின் தாய் என்ற தலைப்பில்காலை 7:30 மணிக்கு செபமாலை பவனி, திருப்பலி வள்ளியூர் அருட் பணி இசிதோர் தலைமையில் நட க்கிறது. ஆறாம் திருவிழாவினைகிளைப்பங்குகளின் இறைமக்கள் சிறப்பு செய்கின்றனர்.துரைகுடியி ருப்பு பங்குத்தந்தை அருட்பணி ஜெரால்டு ரவி தலைமையில் மாலை 6:30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.இரவு சிறப்பு நிகழ்வாக பிரகாசபுரம் ஞாயிறு மறைக்கல்வி மாணவச் செல்வங் களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெ றுகிறது.
7 ஆம் திருவிழாவான 12.08.2024 திங்கட்கிழமை மரியாள் அன்பின் ஊற்று என்ற தலைப்பில் காலை 5:40 மணிக்கு செபமாலை பவனி, திருப்பலி சி.சவேரியார்புரம் பங் குத்தந்தை அருட்பணி ரெமிஜியூஸ்
தலைமையில் நடைபெறுகிறது.7 ஆம் திருவிழாவினை பிரகாசபுரம்
அருட்சகோதரிகள்,புனித மரியன் னை நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரிய பெருமக்கள் சிறப்பு செய்கின்றனர்.தென்மண்ட லம் ஆர்.சி.பள்ளிகளின் கண்கா ணிப்பாளர் அருட்பணி ஸ்டாலின்தலைமையில் மாலை 6:30 மணிக்கு செபமாலை, மறையுரை, நற்கரு ணை ஆசீர் நடைபெறுகிறது.சிற ப்பு நிகழ்வாக பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா நடைபெறுகிறது.
8 ஆம் திருவிழாவான 13.08.2024 செவ்வாய்க்கிழமை மரியாள் விடி யற்காலத்தின் விண்மீன் என்ற தலைப்பில் காலை 5:40 மணிக்கு
செபமாலை பவனி, திருப்பலி சிதம் பராபுரம் பங்குத்தந்தை அருட்பணி இருதயசாமி தலைமையில் நடை பெறுகிறது. எட்டாம் திருவிழா வினை திருக்குடும்ப சபையார், புனித சூசையப்பர் அன்பியம், புனித சவேரியார் அன்பியம் சிறப்பு செய்கின்றனர்.சிந்தாமணி பங்குத் தந்தை அருட்பணி ஆரோக்கியராஜ்தலைமையில் மாலை 6:30மணிக்கு செபமாலை,மறையுரை, நற்கரு ணை ஆசீர் நடைபெறுகிறது. அன் றையஇரவு சிறப்புநிகழ்வாக நாஞ் சில் கலைக்குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
9 ஆம்திருவிழாவான 14.08.2024 புதன்கிழமை மரியாள் உயிருள்ள நற்கருணை பேழை என்ற தலைப் பில் காலை 7:30 மணிக்கு செபமா லை பவனி, திருப்பலி கடக்குளம்பங்குத்தந்தை அருட்பணி அன்பு செல்வன் தலைமையில் நடைபெ றுகிறது. 9 ஆம் திருவிழாவினை வெளியூர் வாழ் பிரகாசபுரம் இறை மக்கள் சிறப்பு செய்கின்றனர். மாலை 7:00 மணிக்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை வடக்கன் குளம் பங்குத்தந்தை அருட்பணி ஜெபநாதன் தலைமையில் நடைபெறுகிறது. அருட்பணி அருண் மண் ணின் மைந்தர் முன்னிலை வகிக் கிறார்.பாளையங்கோட்டை மறை மாவட்ட அருட்பணி புதுமை ஜோசப் ராஜ் மறையுரையாற்றுகிறார்.இரவு 11 மணிக்கு அன்னையின் அற்புத திருத்தேர்பவனியைவடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி ஜெபநா தன் அர்ச்சித்து துவக்கி வைக்கி றார்.சிறப்பு நிகழ்வாக வாணவேடி க்கை நடைபெறுகிறது.
10 ஆம் திருவிழாவான15.08.2024 வியாழக்கிழமை அன்னையின் மகிழ்ச்சி என்ற தலைப்பில் அதி காலை 3 மணிக்கு பழைய கோவில் முன்பு தேரடித்திருப்பலி மண்ணின்மைந்தர் அருட்பணி ஒயிட் ராஜா
தலைமையில் நடைபெறுகிறது. காலை 8:00 மணிக்கு புதிய செப மாலை தோட்டம் அர்ச்சிப்பு மற்றும் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில்நடைபெறுகிறது.காலை 11:00 மணி க்கு அன்னையின் அற்புத திருத் தேர்பவனிநடைபெறுகிறது.
மாலை 6:30 மணிக்கு நற்கருணை பவனி சாத்தான்குளம் வட்டார முதன்மை குரு அருட்பணி செல்வ ஜார்ஜ் தலைமையில் நடைபெறுகிறது. மறையுரையை தென்மண்டலம் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி வெனி இளங்குமரன் ஆற்றுகிறார். செய்துங்கநல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஜாக்சன் அருள் அடிக ளார் முன்னிலை வகிக்கிறார். நிறைவாக கொடி இறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.இரவு சிறப்பு நிகழ் வாக விஜய் டி.வி.புகழ்அன்னபாரதி குழுவினரின் இன்னிசை பட்டிமன் றம் நடைபெறுகிறது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தா.சலேட் ஜெரால்ட் தலைமையில் விழாக்குழுவினர், அருட்சகோதரிகள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.


