தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தங்கத் தேர்பவனி நடைபெறும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா இம்மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 16வது தங்க தேரோட்டம் வருகின்ற 5ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று ஆய்வு மேற்க்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்


