தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1221 தொடக்கப் பள்ளிகள், 304 நடுநிலைப் பள்ளிகள், 111 உயர்நிலைப் பள்ளிகள், 218 மேல்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம் 1854 பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டன.
மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர். டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இதுபோல் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கியும் பன்னீர் தெளித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.


