தூத்துக்குடியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் / வருவாய் தீர்வு அலுவலர் கி.செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் / வருவாய் தீர்வு அலுவலர் கி.செந்தில்ராஜ் தலைமையில் (01.06.2022) நடைபெற்றது. அப்போது ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் குறுவட்டங்களான சங்கரப்பேரி, புலிப்பாஞ்சான்குளம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி பகுதி 1 மற்றும் 2 ஆகிய குறுவட்ட பொதுமக்களிடமிருந்து பட்டா 87, உட்பிரிவு பட்டா 32, முதியோர், விதவை உதவித்தொகை 18, இலவச வீட்டுமனைப்பட்டா 31, இதர 5 மனு என மொத்தம் 173 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் மாவட்ட ஆட்சியரால் தணிக்கை செய்யப்பட்டது.
ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் / வருவாய் தீர்வு அலுவலர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகாக்களில் 25.5.2022 முதல் 31.5.2022 வரை 1156 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களில் 7.6.2022 அன்று ஜமாபந்தி முடிவடைகிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் வட்டத்தில் பொறுத்தவரை இன்று ஜமாபந்தி முடிவடைகிறது. இவ்வட்டங்களில் இன்று பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும்.
தூத்துக்குடி வட்டத்தில் இதுவரை பெறப்பட்ட மனுக்கள்மீது தீர்வு காணப்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 நபர்களுக்கு தையல் இயந்திரம், 19 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, வருவாய்த்துறை மூலம் பட்டா, தனிப்பட்டா 52 நபர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தில் 10 நபாகளுக்கு உதவித்தொகை, கொரோனா உதவித்தொகை 14 நபர்களுக்கு தலா ரூ.50000 வீதம் ரூ.7 இலட்சம், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் 2 விவசாயிகளுக்கு பவர் ஸ்பிரே உட்பட 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் / வருவாய் தீர்வு அலுவலர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


