தூத்துக்குடியில் பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பூபால்ராயபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் இரண்டாவது மகன் ஜோ விஷ்வா (13), 7 ஆம் வகுப்பு வருகிறார். தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் இவரது அண்ணனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ஜோ விஷ்வா தனது வீட்டில் பின்புறம் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


