நாசரேத்தில் புத்தாண்டையொட்டி தூய யோவான் பேராலயத்தில் பணிபுரியும் குருக்களுக்கு சபை மக்கள் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக பேராலய உதவி குருவானவர் தனசேகர் ராஜா ஆரம்ப ஜெபம் செய்தார். சேகர செயலர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜசிங் சாலமோன் அனைவரையும் வரவேற்றார். பேராலய பாடகர் குழு சிறப்பு பாடல் பாடினர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் மாமல்லன் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தத்திற்கும், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வின் உதவிகுரு தனசேகர் ராஜாவிற்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நாசரேத் சேகரம் சார்பில் பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ் தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தத்திற்கு பழத்தட்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே. ஜெயசீலன், முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினகுமார், சேகர பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ், சேகரமன்ற உறுப்பினர் ரஞ்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தொடர்ந்து பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் ஏற்புரை ஆற்றி, இறைஆசி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் குருவானவர்கள் எரேமியா, மர்காஷிஸ், செல்வராஜ், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசுசெல்வன்,தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட், ஸ்டெல்லா சாலமோன், ஆண்ட்ரூஸ் ஐசக் மற்றும் சேகர மன்ற உறுப்பினர்கள், சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


